×

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.15: கிருஷ்ணகிரியில் இன்று (15ம் தேதி) நடைபெறும் சுதந்திர தின விழாவில், கலெக்டர் தினேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றுகிறார். நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (15ம் தேதி) கொண்டாடப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், கலெக்டர் தினேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். மேலும், அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. விழாவில் மாவட்ட எஸ்பி தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Independence Day ,Krishnagiri ,Collector ,Dinesh Kumar ,Independence Day… ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு