×

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே பள்ளி மாணவர்கள் 50 பேர் வாந்தி மயக்கம்

 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் 250 மாணவர்கள் இன்று மதியம் பள்ளி உணவு சாப்பிட்டு உள்ளனர் அதில் 50 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அரசு பேருந்து மூலமாக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் சம்பவ இடத்தில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags : Sankarapuram, Kallakurichi ,Kallakurichi ,Kaduvanur Panchayat Union Middle School ,Sankarapuram ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...