- நூலகர் நாள்
- பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்ட மத்திய நூலகம்
- வாசகர் வட்டம்
- டாக்டர்
- எஸ்.ஆர். அரங்கநாதன்
- பெரம்பலூர் மாவட்ட நூலகம்
- அதிகாரி
- அஞ்சல்
- முத்து குமரன்…
பெரம்பலூர், ஆக.14: பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து, டாக்டர் எஸ்.ஆர் அரங்கநாதன் பிறந்தநாள் விழா மற்றும் நூலகர் தின விழாவை நடத்தின. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட நூலக அலுவலர்(பொ) முத்துக் குமரன் தலைமை வகித்தார்.
மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் இராதை வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் அகவி முன்னிலை வகித்தார். விழாவில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து கலந்து கொண்டு சிறப்புரை பேசினார்.
மாவட்ட மைய நூலகத்தின் முன்னாள் வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் கோசிபா, வாசகர் வட்ட துணைத்தலைவர் தமிழ்க் குமரன், வாசகர் வட்ட உறுப்பினர் அரும்பாவூர் கவிஞர் தாகிர்பாஷா, தன்னம்பிக்கை பேச்சாளர் வைரமணி, வாசகர் வட்ட உறுப்பினர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் மாவட்ட மைய நூலகத்தின், கிளை நூலகங்களின் நூலகர்கள், அலுவலர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மைய நூலக மூன்றாம் நிலை நூலகர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
