- Jayankondam
- அகில இந்திய மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கம்
- தமிழ்நாடு அரசு
- ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம், ஆக.14: மூத்த குடிமக்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார்.
கவுரவ தலைவர் சிவ சிதம்பரம், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.முன்னதாக நிர்வாகி ராசகோபால் வரவேற்று பேசினார். கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி வரவு செலவு வாசித்தார். பாலகிருஷ்ணன் நீத்தார் நிதி உதவி திட்ட வரவு செலவு வாசித்தார்.
கூட்டத்தில் பொன்னேரி என்கின்ற சோழங்கம் ஏரியை மேம்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மற்றும் டெல்லியில் தங்கி அயராது பணியாற்றும் மருதூர் பெரியசாமியை இயக்கத்தின் சார்பாக பாராட்டப்பட்டது.70 வயது நிறைவுக்கு கூடுதல் பென்ஷன், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை உள்ளிட்டவைகள் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி ராமையன் நன்றி கூறினார்.
