×

சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

 

சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும்தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட பதிவில்:

தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Tamil Nadu Congress ,Tea Party ,Independence Day ,Chennai ,Tamil Nadu Congress Assembly ,President of ,Tamil Nadu ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...