×

பெரம்பலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 5 பவுன் கொள்ளை

பாடாலூர், ஆக. 13: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் என்பவரின் மகன் ராகதமிழ்குமரன்(35). இவர் முன்னாள் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது வீடு ஆலத்தூர்கேட்-செட்டிகுளம் செல்லும் சாலை அருகே வயல் பகுதியில் உள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்ற ராகதமிழ்குமரன் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Perambalur ,Patalur ,Nattarmangalam, Alathur taluka ,Raghathamizhkumaran ,Kannaiyan ,Nattarmangalam village ,Alathur taluka, Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்