×

பெரம்பலூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது

பாடாலூர், ஆக 13: திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நம்புகுறிச்சியை சேர்ந்தவர் ரெங்கராஜ்(63). இவர், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் நடந்த சந்தைக்கு காய்கறி வாங்குவதற்கு வந்தார். பின்னர் சந்தையில் காய்கறி வாங்கி விட்டு பைக்கில் புறப்பட்டார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம், ரெங்கராஜ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரெங்கராஜை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜ் இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விபத்து ஏற்படுத்தியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா மொகலா கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அய்யனார்(23) என்பவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : Perambalur ,Patalur ,Rengaraj ,Nambukurichi ,Lalgudi taluka ,Trichy district ,Alathur taluka ,Perambalur district ,
× RELATED 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர்...