×

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கான விடைக்குறிப்பு இன்று வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக நுழைவு தேர்வு மைய இயக்குநர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலைக் கழகத்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வு கடந்த ஜூலை 27ம் தேதி 15 மாவட்டங்களில் 43 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 3274 இடங்களுக்கு 22,492 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 19,403 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். இந்த தேர்வுக்கான கேள்வி மற்றும் விடைக்குறிப்பு இன்று https://tancet.annauniv.edu/tancet/irtdcckeys/index.phd என்ற இணையதள பக்கத்தில் வெளியாகிறது. இந்த விடை குறித்து ஏதேனும் மாற்று கருத்து இருப்பின் தேர்வர்கள் நுழைவுசீட்டு ஆதாரங்களுடன் directorentrance@g.mail.com என்ற இ-மெயிலுக்கு தெரியப்படுத்தலாம்.

Tags : Chennai ,Anna University Entrance Examination Center ,Sreedharan ,Anna University ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...