- தேர்தல் ஆணையம்
- மேற்கு வங்கம்
- பிரதம செயலாளர்
- கொல்கத்தா
- பருய்பூர் பர்மா
- தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம்
- மொய்னா
- பூர்பா மெதினிபூர் மாவட்டம்
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பரூய்பூர் புர்மா மற்றும் புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் மொய்னா ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட மேற்குவங்க 2 தேர்தல் பதிவு அலுவலர்கள், 2 உதவி தேர்தல் பதவி அலுவலர்கள் மற்றும் ஒரு தரவு பணியாளர் என 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக கடந்த 5ம் தேதி தெரிவித்திருந்தது. ஆனால், அந்த 4 அரசு ஊழியர்கள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் இருந்து மட்டும் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்க மேற்குவங்க தலைமை செயலாளர் மனோஜ் பந்த் இன்று மாலைக்குள் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
