×

காட்டூர் பள்ளிவாசலில் 1000 பேருக்கு நோன்பு கஞ்சி

மேட்டுப்பாளையம், ஏப்.4: மேட்டுப்பாளையத்தில் காட்டூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தை முன்னிட்டு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமிய மக்களின் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்ட நிலையில் நடப்பு மாதம் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஒரு மாதத்திற்கு கஞ்சி தயார் செய்யப்படும்.

’நோன்புக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த கஞ்சியை பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் உட்கொள்வதோடு, சகோதர சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர். அதன் ஒருபகுதியாக பள்ளி வாசலில் தினம் தோறும் 120 கிலோ கஞ்சி காய்ச்சப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

The post காட்டூர் பள்ளிவாசலில் 1000 பேருக்கு நோன்பு கஞ்சி appeared first on Dinakaran.

Tags : Kattur mosque ,Mettupalayam ,Ramadan ,Muslims ,Kattur Sunnat Jamaat Mosque ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...