×

கமுதி அருகே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு

கமுதி, டிச. 8:  கமுதி அருகேயுள்ளது புதுக்கோட்டை கிராமம். இவ்வூரில் சாயல்குடி செல்லும் சாலையில் கருப்பணசாமி கோயில் அருகே புதிய டாஸ்மாக் மதுபான கடை அமைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘புதுக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. ஏற்கனவே இப்பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, சண்டை- சச்சரவுகள் ஏற்பட்டு, பல்வேறு வழக்குகளுடன் அரசு பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு புதிய மதுபான கடை அமைத்தால் இது மேலும் அதிகமாகும். மேலும் வருமானத்தை இழக்கும் இளைஞர்களால் பெண்களின் வாழ்வும் சீரழியும். எனவே மாவட்ட நிர்வாகம் மதுபான கடை அமைக்க முயற்சிப்பதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றனர்.

Tags : protest ,store ,Tasmac ,Kamuti ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!