×

ஆட்டம் காணும் ஆலம்பட்டி மேம்பாலம்

திருமங்கலம், டிச.8: திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. மிகவும் குறுகலான தரைப்பாலமாக இருந்த இந்த பாலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலமாக புதியதாக கட்டப்படடது. மதுரையிலிருந்து ராஜபாளையம், தென்காசி, வழியாக கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் நடுவே ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு சாலை பெயர்ந்துள்ளதால் பாலம் உறுதி தன்மையை இழுந்து வருகிறது.பாலத்தின் நடுவே அமைக்கப்பட்ட சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது பாலம் அதிர்வடைகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் பாலம் சேதமடைந்து வருகிறது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் உண்டாகும் முன்பு ஆலம்பட்டி மேம்பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் புனரமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருமங்கலம் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags : Alampatti ,game ,
× RELATED மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில்...