×

ஒடிசாவில் நடந்த மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு: பிஜு ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

ஒடிசா:ஒடிசாவில் நடந்த மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பிஜு ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஒடிசாவில் மக்களவை தேர்தலில் பெரும் முறைகேடு-பி.ஜே.டி

ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தது. புல்பானி மக்களவை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 682 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன.

ஒரே தொகுதியில் மக்களவை, சட்டமன்ற வாக்குப்பதிவில் வித்தியாசம்

தால்சரா சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் 660 கூடுதல் வாக்கும் மற்றொரு சாவடியில் 784 கூடுதல் வாக்குகளும் எண்ணப்பட்டுள்ளன. ஒரு மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளுக்கும் அந்த தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குக்கும் வேறுபாடு உள்ளது. பாஜக சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்கானல் தொகுதியில் 4056 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன.

தேர்தல் முறைகேடு – வழக்கு தொடர பிஜேடி முடிவு

கந்தமால், போலன்கிர், ஜாஜ்பூர் தொகுதிகளிலும் பதிவான வாக்குக்கும் எண்ணப்பட்ட வாக்குக்கும் வித்தியாசம் உள்ளது. தேர்தல் ஆணைய தகவல்களை விரிவாக ஆய்வுசெய்ததில் முறைகேடு தெரிய வந்திருப்பதாக பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஒடிசாவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 50% சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிந்த பிறகு ஒரு தொகுதியில் 30% வாக்கு சதவீதம் உயர்வு

பல தொகுதிகளில் தேர்தல் முடிந்த பிறகு 30 சதவீதம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக குற்றச்சாட்டு. தேர்தல் முறைகேடுகள் | தொடர்பாக ஆணையத்தில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தேர்தல் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பிஜு ஜனதா தளம் எச்சரிக்கை விடுத்தது.

 

Tags : Lok Sabha and Assembly elections ,Odisha ,Biju Janata Dal party ,Lok Sabha ,BJD ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...