- கோச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை
- கோச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை
- அரச தாவரவியல் பூங்கா
- கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்ச
- முனார், கேரளா
மூணாறு, ஆக. 12: கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. கேரளா மாநிலம் மூணாறில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு தாவரவியல் பூங்கா அருகே ஜூலை 26 இரவில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் உயிரிழந்தார். அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் அப்பகுதியில் நிமீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
கேரள பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் கே.எஸ். சஜின் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று ட்ரோன்கள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வின் போது இதைக் கண்டறிந்தனர். இடிந்து விழுந்த மலையின் ஒரு பகுதி மட்டுமே கீழே விழுந்துள்ளது. மலையின் பெரும்பகுதி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதியில் பாறைகள் மற்றும் மண் ஆபத்தான நிலையில் உள்ளன. கனமழை பெய்யும் நிலையில் இவை கீழே விழக்கூடும் என்பதையும் குழு கண்டறிந்துள்ளது.
