×

எளம்பலூர் அரசு பள்ளியில் 12ம்வகுப்பு தேர்வு முடிந்தவுடன் வகுப்பறையை சுத்தப்படுத்தி வண்ணம் தீட்டிய மாணவர்கள்

பெரம்பலூர்,ஏப்.5: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடி ந்தவுடன் வரும் கால்வி ஆண்டில் அதே வகுப்பில் பயில உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தங் கள் வகுப்பறையை சுத்தப் படுத்தி -வண்ணம் திட்டிச் சென்ற மாணவர்களை தலை மையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர். பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசி ரியராக சிதம்பரம் என்பவர் உள்ளார். இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடி வடைந்தது. இதனை தொடர்ந்து பன்னிரண்டாம் வகு ப்பில் கணிதம், உயிரியல் பாடங்களை படித்த -ஏ குரூப் மாணவ,மாணவியர் 28 பேர் தேர்வு முடித்த கை யோடு பள்ளி வகுப்பறை யில் ஒன்றுகூடினர். 12-ஏ வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு முன்பாகத் திட்டமிட்டபடி தங்களது பன்னிரண்டாம் வகுப்பு ஏ குரூப் வகுப்பறையை மாணவ, மாணவியர் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தனர்.

பின்னர் அவர்கள் வாங்கி வந்த டிஸ்டம்பர் பெயிண்ட் மூ லம் வகுப்பறை முழுவதும் வண்ணம் தீட்டி அலங்கரித் து வைத்தனர். இது வருகிற ஜூன் மாதத்தில் இரு ந்து அதே வகுப்பறையில் 12ம் வகுப்பு கல்வி பயி லவுள்ள மாணவ மாணவியருக்காக முன்கூட்டியே உதவும் நோக்கத்தில் முன் மாதிரியாகத் திகழும் விதத்தில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து விட்டு செல்வோம் என்ற நோக்கத்தில், 12 மாதம் கல்வி பயின்ற 12ம் வகுப்பு வகுப்பறையை தூய்மைப்படுத்தி அலங்க ரித்துச் சென்ற நிகழ்வு, பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரம், வகுப்பு ஆசிரியர் ஜன ராமன் மற்றும் இதர ஆசிரியர்கள், அலுவலர் கள், மாணவ, மாணவியர் மத்தியில் மிகுந்த ஆச்சரிய த்தையும் பாராட்டையும் பெற்றது.

இது குறித்து கேள்விப்பட்ட பெரம்பலூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் அறி வழகன் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகளும் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு படித்து முடித்த ஏ குரூப் மாணவ ர்களின் செயல்பாட்டுக்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தனர்

The post எளம்பலூர் அரசு பள்ளியில் 12ம்வகுப்பு தேர்வு முடிந்தவுடன் வகுப்பறையை சுத்தப்படுத்தி வண்ணம் தீட்டிய மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Elambalur Government School ,Perambalur ,Dinakaran ,
× RELATED பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை