டெல்லி: ஆளும் பாஜக அரசுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். கவன ஈர்ப்பு தீர்மானம் இல்லை, முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுவது இல்லை. பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதும் இல்லை என்று டெல்லியில் அவர் பேட்டி அளித்தார். நாடாளுமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக எதிர்க்கட்சிகள் மீதே பாஜக பழி சுமத்துகிறது. நாடாளுமன்றத்தில் மசோதாக்களை விவாதமின்றி பாஜக அரசு நிறைவேற்றுகிறது என்று தெரிவித்தார்.
