×

நுரையீரல் காசநோயால் பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை: ரேலா மருத்துவமனை சாதனை

தாம்பரம்: நங்கநல்லூரை சேர்ந்தவர் கண்ணம்மாள் (53). இவர், உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்ததால், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவர் மிகவும் எடை குறைந்த நிலையிலும், கீழ் மூட்டுகளில் அதிகப்படியான வீக்கத்துடனும் இருந்துள்ளார். இதனால், அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததோடு, கடுமையான வயிற்று வலி, புரத கலோரி ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது. மேலும், பொதுவாக ஒருவருக்கு புரதச்சத்து அளவானது 3.5 ஆக இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு 1.3 மட்டுமே இருந்ததால், நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள், கண்ணம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால், 37 கிலோவில் இருந்து 54 கிலோ எடைக்கூடி, ஆரோக்கியமாகவும், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post நுரையீரல் காசநோயால் பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை: ரேலா மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Rela ,Tambaram ,Kannammal ,Nanganallur ,Rela Hospital ,Krompettai ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!