ஐதாராபாத்: ஆன்லைன் ரம்மி செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத சூதாட்ட செயலியை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஐதாராபாத் ED அலுவலகத்தில் ஆஜரான ராணா டகுபதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் .
