- பூர்ணாமி பூஜை
- துடியலூர்
- ஆடிவெள்ளி பூஜை
- பவுர்ணமி
- பூஜா
- வரலட்சுமி விரத பூஜை
- பன்னாரி மாரியம்மன் கோயில்
- உருமாண்டம்பாளையம்
- துடியலூர், கோயம்புத்தூர்
பெ.நா.பாளையம்: கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில் பழமையான பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி பூஜை, பெளர்ணமி பூஜை மற்றும் வரலட்சுமி விரத பூஜைகள் நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 108 பெண்கள், குழந்தைகள் கலந்துக்கொண்ட திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு அம்மன் படம், மஞ்சள் கொம்பு, மஞ்சள் சரடு, பச்சரிசி, சீப்பு – கண்ணாடி, வளையல், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், தலைவாழை இலை, சாத்துக்குடி, பச்சைமாவு, குங்குமம் – மஞ்சள், ஜவ்வாது திருநீர், துணிப்பை, மல்லிப்பூ, தீப்பட்டி, விளக்கு திரி, செக்கு நல்லெண்ணெய், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அம்மனுக்கு 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல் தலைமையில் பெண்கள் விளக்கு ஏற்றிவைத்து பூஜைகள் செய்தனர். அதன்பின் பல்லக்கில் கன்னி பெண்கள் அம்மனை அழைத்து வந்து ஊஞ்சலில் அமர்த்தினர். பெளர்ணமி பூஜையில் பூசாரி வாயில் துணி கட்டி மாப்பிள்ளை விநாயகர், தல விருட்சமான வில்வமரம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின் கண்ணாடியில் பார்த்து நிலவுக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு அம்மன் படத்துடன் மஞ்சள் சரடு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை கோவில் மூலஸ்தான குழு மற்றும் பெளர்ணமி குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்தனர்.
