×

கரூரில் தேசிய டிஜிட்டல் நூலக உறுப்பினர் சங்க தொடக்க விழா

கரூர், ஆக.11: கரூரில் தேசிய டிஜிட்டல் நூலக உறுப்பினர் சங்க தொடக்க விழா நடைபெற்றது.கரூர் தனியார் கல்லூரியின் நூலகத்துறை மற்றும் இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் இணைந்து, நூலகத்தந்தை அரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு டிஜிட்டல் அவேக்னிங் என்டிஎல்ஐ யூசர் அவர்னஸ் அன்ட் கிளப் லஞ்ச் என்ற தலைப்பில் விழா மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 126 மாணவர்கள் உறுப்பினராக உள்ள தேசிய டிஜிட்டல் நூலக உறுப்பினர் தொடக்க விழாவும் நடைபெற்றது.

இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக கல்வி வளங்களை தரும் இணையதள அடிப்படையிலான மென்நூல் ஆகும். இது மாணவர்களின் சுய கற்றலுக்கு ஒரு புதிய வரம்பற்ற வாய்ப்பாக விளங்குகிறது.

இந்த நிகழ்வில், தமிழக அரசின் நல் நூலக விருதாளர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். முதல்வர் இருளப்பன் வரவேற்றார். நூலகர் மணிகண்டன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உதவி நூலகர் காவியா ஒருங்கிணைத்தார்.

 

Tags : National Digital Library Members Association ,Karur ,Karur Private College ,National Digital Library of India ,Digital Awakening NDLI User ,Awareness… ,
× RELATED அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை