×

ஆன்லைன் சூதாட்டத்தால் ஐடி ஊழியர் தற்கொலை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் இழந்த ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அரசமர தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சுரேஷ்குமார்(22). பிஎஸ்சி பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது வொர்க் பிரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தே பணியாற்றினார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரத்தை இழந்ததாக கூறப்படுகிறது. பணம் இழந்தது முதல் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kumbakonam ,Manikandan ,Rajamara Street ,Nachiarko ,Tanjay District Kumbakonam ,Suresh Kumar ,Chennai ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...