×

சீன நிறுவனங்களுடனான வணிக தொடர்பு இன்டெல் சிஇஓ பதவி விலக அதிபர் டிரம்ப் உத்தரவு

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனமான இன்டெல் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த மார்ச் மாதம் லிப் பு டான் நியமிக்கப்பட்டார். மலேசியாவில் பிறந்தவரான லிப் பு டானுக்கு 8 சீன நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க எம்பி டாம் காட்டன் கூறி உள்ளார். இது தொடர்பாக இன்டெல் நிறுவனத்தின் தலைவர் பிராங்க் யேரிக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

லிப் பு டான் இதற்கு முன் பணியாற்றிய கேடன்ஸ் டிசைன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். கேடன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை சீன ராணுவ பல்கலைகழகத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில் இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரியின் சீன வணிக தொடர்புகள் இருப்பதாக கூறப்படுவது தொடர்பான தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி லிப் பு டான் உடனே பதவி விலக வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Tags : President Trump ,Intel ,New York ,Lib Pu Tan ,Intel Company ,United States ,Malaysia ,Lip ,Pu Tan ,
× RELATED மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்யாவின் ராணுவ தளபதி உயிரிழப்பு