×

தொடர்கனமழை காரணமாக விசுவக்குடி அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து

பெரம்பலூர், டிச.7: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு வேப்பந்தட்டை தாலுக்கா, அன்னமங்கலம் ஊராட்சி க்கு உட்பட்ட விசுவக்குடி அருகே பச்சைமலை, செம் மலைஆகிய இரு மலைக் குன்றுகளை இணைத்து, ரூ33.67கோடி மதிப்பில், பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பாக, நபார்டு வங்கி நிதியுதவியுடன் புதிய அ ணைக்கட்டு கட்டிமுடிக்கப் பட்டது. அணை கட்டிமுடிக் கப்பட்ட 2015ம் ஆண்டிலேயே வடகிழக்கு பருவமழை யால் அணை நிரம்பும் நி லையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது. பிறகு 2017ம் ஆண்டும் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால் குடிநீர் ஆதாரத்திற்காம், வெங்கலம் ஏரிக்காகவும் தண் ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் புரெவிப் புயல் காரணமாக பெரம்ப லூர் மாவட்டத்தில் 2,3,4 ஆகிய தேதிகளில்தொடர் மழை பெய்து வருவதால் பச்சை மலையில் இருந்து வரும் நீர் வரத்துக் காரண மாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக 2ம்தேதி 285மிமீ மழை பெய்த நிலை யில் 3ம்தேதி விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்த தால் பச்சை மலையில் இரு ந்து தண்ணீர் வரத்து வாய் க்கால் வழியாக அணைக் கு ஆர்ப்பரித்து ஓடிவருகி றது இதன் காரணமாக 41.67மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்றிரவு வரை 12 மில்லியன் கனஅடி நிரம்பியது.

குறிப்பாக 33 அடி உயரம் உள்ள அணைக்கட்டில் தற்போது 15அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. செம்மண் கலந்து வாய்க் காலில் கரைபுரண்டு வந்து சேர்ந்ததால் அணைக்கட்டு சேற்று நீருடன் செங்கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அணைக் கட்டு 17முதல் 20அடிக்கு மேல் நிரம்ப விடாமல் பொ துப்பணித்துறை அணை யைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசுவக்குடி அணைக்கட்டு திறக்கப்பட்டு 5ஆண்டுக ளில் குளிக்கச் சென்றவர் களில் கல்லூரி வாலிபர், ஆட்டோ டிரைவர் என இது வரை 6பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே சேறுகலந்தத் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், நீர்வரத்து அதிகமுள்ளதா லும், அணை க்கு உள்ளே இறக்கிக் குளிக்க கூடாதென பொதுப்ப ணித்துறை சார்பாக எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் மது அருந்தவும் தடைவிதி க்கப் பட்டுள்ளது.

Tags : Visuvakudi Dam ,
× RELATED வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில்...