×

மண்ணின் உயிரோட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

சின்னமனூர், டிச. 7: சின்னமனூர் அருகே, காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையத்தில் மாவட்ட அளவில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. முதுநிலை விஞ்ஞானி திருமுருகன் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் முன்னிலை வசித்து வரவேற்றார். தேனி வேளாண்மை இயக்குனர் அழகு நாகேந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன், சின்னமனூர் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி ஆகியோர் பேசினர். அப்போது, ‘மண்ணை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது கடமை, மண்ணின் பல்லுயிர் தன்மையை கெட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் மண்வளத்தை போற்றும் விதமாக இயற்கை சார்ந்த உரங்களை பயன்படுத்தி மண்புழுக்கள் செத்து விடாமல் காத்து, சுகாதாரமான உணவு தானியங்களை உற்பத்தி செய்து தரமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து மாவட்டளவில் விவசாயிகள் பங்கேற்று மண்வளம் காக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். மண்வளம், நீர்வள அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. நிறைவாக தொழில் நுட்ப அலுவலர் அருண்ராஜ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்