×

கார் ஷோரூமில் முதியவர் சடலம்

புழல்: அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் குமார் (75). இவர், புழல் காவாங்கரை பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் தங்கி, காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை இவர் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் குமார் சடலம் கிடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலஅறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து, போலீசார் கூறுகையில், ‘‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முதியவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்’’ என்றனர்.

The post கார் ஷோரூமில் முதியவர் சடலம் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Kumar ,Ayappakkam ,Tamil Nadu Housing Board ,Puzhal Kavankarai ,
× RELATED புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா...