- ஆடி தேரோட்டம்
- அழகர்கோயில்
- மதுரை
- ஆடிப்பெருந்திருவிழா
- கல்லாஹகர் கோயில்
- ஆடித் திரு விழா
- Annam
- சிம்மம்
- அனுமன்
மதுரை, ஆக. 9: அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. இதன்படி நடப்பாண்டிற்கான ஆடித்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் அன்னம், சிம்மம், அனுமார், கருட, சேஷ, யானை, புஷ்ப சப்பரம் மற்றும் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 8.40 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர் அலங்கார பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி 5 நிலைகளுடன் 51 அடி உயரம் கொண்ட இந்த தேரில் 300க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இதனை தேரை பக்தர்கள் இழுக்க புதிய வடம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் தொட்டிகள், வாகன நிறுத்துமிடம், தற்காலிக கழிப்பிடம், மருத்துவ முகாம் மற்றும் தீயணைப்பு வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாதுகாப்பு பணிகளில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
