- நாகப்பட்டினம்
- நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம்
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
- அற்புதராஜ் ரூஸ்வெல்ட்
- மாவட்ட செயலாளர்
- ஸ்ரீதர்…
நாகப்பட்டினம், ஆக. 9: தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அற்புதராஜ்ரூஸ்வெல்ட் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், அவுட்சோர்சிங் மற்றும் காண்ட்ராக்ட் முறையில் கொத்தடிமைகள் போல் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணிக்கு அமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் நன்றி கூறினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
