×

குளித்தலை அருகே சாலைப்பணி துவங்காததை கண்டித்து சேற்றில் செடிகளை நட்டு போராட்டம்

குளித்தலை, டிச. 7: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராஜேந்திரம் கிராமத்தில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் மாரியம்மன் கோவில், சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் உள்ள பகுதிகளில் தார்சாலை அமைக்க கடந்த ஆறு மாத காலத்துக்கு முன்பு பணிகள் தொடங்கியது. அதன் பிறகு தொய்வடைந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் ஜல்லி கற்கள் போட்டு செம்மண் கொட்டப்பட்ட நிலையில் மீண்டும் கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது மழைக்காலம் என்பதால் ராஜேந்திரம் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக இருந்து வருகிறது.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழும் நிலையும் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. இதனை கண்டித்து நேற்று விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் அப்பகுதி பெண்கள் சாலை பணிகள் முடிவு பெறாமல் சேறும் சகதியுமாக இருக்கும் இடத்தில் செடிகளை நட்டு தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் உடனடியாக தார் சாலை அமைக்காவிட்டால் குளித்தலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags : plants ,mud ,road works ,Kulithalai ,
× RELATED வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலையில்...