கனடா: கனடாவில் உள்ள மோஹாக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இயன்முறை மருத்துவப் படிப்பு படித்து வந்த இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா (21), கடந்த ஏப்ரல் 17ம் தேதி, ஹாமில்டன் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, தவறுதலாகப் பாய்ந்த குண்டு பட்டு படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், நான்கு கார்களில் வந்த கும்பலுக்குள் இடையே ஏற்பட்ட தகராறில், அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டபோது, அந்த வழியாகச் சென்ற ஹர்சிம்ரத் மீது குண்டு பாய்ந்தது தெரியவந்தது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஜெர்டைன் போஸ்டர் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
