×

பாபர் மசூதி இடிப்பு தினம்: மேலப்பாளையத்தில் மமமுக, எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

நெல்லை, டிச.7: அயோத்தியில் டிசம்பர் 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மமமுக மாநகர மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமை வகித்தார். 1992 டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக்கண்டித்து கட்சியின் நிறுவனர் பாளை ரபிக், தென்மண்டல அமைப்பு செயலாளர் ரசூல் மைதீன் ஆகியோர் பேசினர். நெல்லை மாவட்ட தலைவர் சித்திக், துணை தலைவர் அஸ்ரப் அலி, செயலாளர் பேட்டை மைதீன், துணை செயலாளர் சேரை பீர், பொருளாளர் யாசீன், மருத்துவ அணி செயலாளர் பேட்டை யூனுஸ், மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நகர தலைவர் அஸ்கர் நன்றி கூறினார்.

 இதேபோல் அயோத்தியில் பாபர் மசூதி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாளை சட்டசபை தொகுதி தலைவர் புகாரி சேட் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் சாகுல் ஹமித் உஸ்மானி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட பேச்சாளர் பாத்திமா நுஸ்ரத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நெல்லை மாவட்ட தலைவர் கனி, மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது, மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், பொருளாளர் ஆரிப் பாஷா, எஸ்டிடியூ மாவட்ட செயலாளர் பசீர்லால், துணை தலைவர் ரசூல்,

பொருளாளர் செய்யது மைதீன், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் மின்னத்துல்லா, செயலாளர் சேக், ஜூனைத், யூனுஸ், காதர், மாவட்ட தலைவர் ரினோஷா ஆலிமா, பாளை சட்டசபை தொகுதி துணை தலைவர்கள் மகபூப்ஜான், செரீப், பொருளாளர் அப்துல்காதர், இணை செயலாளர் சிந்தா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மூசல், மாவட்ட செயலாளர் காதர் மீரான், தொகுதி பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி  மேலப்பாளையத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள்  அடைக்கப்பட்டிருந்தன.

Tags : Babri Masjid Demolition Day ,Mamamuga ,STBI ,Melappalayam ,protest ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்