×

பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு

 

 

சென்னை: பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing -யில் தேர்ச்சி பெற்று 23 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேற்படி, 2 முதல் 5 வருட பணி அனுபவமுள்ள பணியாளர்களுக்கு ரூ.65,000/-, ஊதியமாகவும் 6 முதல் 10 வருட பணி அனுபவமுள்ளவர்களுக்கு 73,000/-ஊதியமாகவும், 10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000/-ஊதியமாகவும் வழங்கப்படும்.

இந்நிறுவனம் பணிக்காலியிடங்கள் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான இந்நிறுவன வலைதளமான குறித்த விவரங்கள் www.omcmanpower.tn.gov.in – ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை www.omcmanpower.tn.gov.in மூலமாகவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக (6379179200) (044-22502267) அறிந்து கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற linkல் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்து உள்ளவர்கள் செய்தும் கல்விச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18/08/2025 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப்பணிக்கு தேர்ச்சிபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/-மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

 

Tags : Bhutan Ministry of Health ,Chennai ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்