×

தஞ்சையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஆக. 8: தஞ்சையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வை முன்னிட்டு, தஞ்சாவூர் காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமையில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட தலைவர் ஆசிப் அலி, மாவட்ட திட்ட தலைவர் ஜாகிர் உசேன், முன்னாள் உதவி ஆளுநர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த 9 கல்லூரிகளில் இருந்து சுமார் 1500 செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர். விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பேனர்களை ஏந்தி, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினர். பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தொடங்கி ராஜா மிராசுதார் மருத்துவமனை வரை சென்று முடிவடைந்தது.

 

Tags : World Breastfeeding Week Awareness Rally ,Thanjavur ,Thanjavur Cosmos Rotary Association ,World Breastfeeding Week Awareness ,Thanjavur Municipal Corporation ,Mayor San. Ramanathan ,Deputy Mayor ,Anjugam… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா