- ஸ்டாலின்
- பெரிய வெண்மணி கிராமம்
- குன்னம்
- போக்குவரத்து
- மின்சார அமைச்சர்
- எஸ்சி சிவசங்கர்
- குன்னம் தாலுக்கா, பெரம்பலூர் மாவட்டம்
குன்னம், ஆக.8: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பெரிய வெண்மணி கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பெரிய வெண்மணி, சின்ன வெண்மணி, கொளப்பாடியை சுற்றியுள்ள கிராம மக்கள் மகளிர் உரிமைத்தொகை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை,மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித் துறை,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மற்றும் பல துறைகளில் இருந்து தங்களுக்கு தேவையான திட்டத்தில் மக்கள் மனுக்களை பதிவு செய்தனர்.
அப்போது முகாமை பார்வையிட வந்த அமைச்சர் சா.சி.சிவசங்கர் மனுக்கள் கொடுத்த பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஒவ்வொரு துறையாக சென்று அங்கு இருந்த பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். மகளிர் உரிமை தொகை விண்ணப்ப மனு அளித்த பெண்கள் தங்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, மனுக்கள் அளித்த அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, வருவாய் ஆய்வாளர்கள், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
