×

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற போர்வையில் பின்வாசல் வழியாக என்ஆர்சியை கொண்டு வர தேர்தல் ஆணையம் முயற்சி: மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இரண்டு மாநில அரசு ஊழியர்கள் உள்பட நான்கு அதிகாரிகள் உள்பட ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வௌியிட்ட அறிவிப்பில், “இரண்டு மாவட்டங்களில் தங்கள் கடமையை நிறைவேற்ற தவறிய, வாக்காளர் பட்டியல்களை தயாரிப்பதில் குளறுபடிகள் செய்த இரண்டு தேர்தல் பதிவு அதிகாரிகள், இரண்டு தேர்தல் உதவி பதிவு அதிகாரிகள் மற்றும் ஒரு தரவு உள்ளீட்டு பணியாளர்(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர்” என தெரிவித்திருந்தது.

இதுகுறித்து மம்தா பானர்ஜி தன் எக்ஸ் தள பதிவில், “மேற்குவங்கத்தில் பேரவை தேர்தலுக்கு இன்னும் நிறைய நாள்கள் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்துதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். அது எங்களுக்கு தெரியும். அதற்கு முன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்ைல?” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “பீகாரை போலவே மேற்குவங்கத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற போர்வையில், பின்வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது” என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

Tags : Mamata Banerjee ,Election Commission ,NRC ,Kolkata ,West Bengal ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...