×

கலைஞரின் ஒளியில் “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தந்தை பெரியாரும், அண்ணாவும் தமிழினத்துக்கு தந்த நெருப்பு கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!

தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!

அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி:
எழுதும் பேனாவில் தொடங்கி, வாசிக்கும் புத்தகம், முழக்கமிடும் போராட்டக் களம், உரை நிகழ்த்தும் நாடாளுமன்றம், தினம் எதிர்ப்படும் மக்கள் என எங்கு காணினும் தென்படும் உங்கள் முகமே!

கருத்தாய், கண்மணியாய், கொள்கைக் குன்றாய், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய், நீங்காத நிழலாய், நெஞ்சுக்கு நிகரான உயிராய், உயிரினும் மேலான தலைவராய் எங்களுள் நீக்கமற நிறைந்து நிற்கும் முத்தமிழறிஞரே நீங்கள் காட்டிய சமூகநீதிப் பாதையில் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுத்திடுவோம்! எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Kalaignar ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Periyar ,Anna ,Tamil Nadu ,DMK ,Kanimozhi ,Muthuvelar ,Anjugam Ammaiyar ,earth ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...