×

கூட்டுறவு வங்கி 2000 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்திய குடியுரிமையுடைய தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

https://www.drbchn.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் வரும் 29ம் பிற்பகல் 5.45 மணி வரை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 157 பணியிடங்கள், வேலூரில் காலியாக உள்ள 41 பணியிடங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 பணியிடங்கள், மதுரை மாவட்டங்களில் காலியாக உள்ள 35 பணியிடங்கள் உள்ளிட்ட 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Cooperative Bank ,Chennai ,Cooperative Banks ,Cooperative ,Registrar of ,Cooperative Societies ,Chennai District ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...