×

அமித் ஷா குறித்து சர்ச்சை கருத்து: கோர்ட்டில் ராகுல் நேரில் ஆஜர்

 

ராஞ்சி: பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் அமித் ஷாவை மறைமுகமாக சர்ச்சைக்குரியை வகையில் பேசிய அவதூறு வழக்கில், ஜார்கண்ட் நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சியில் கொலையாளி ஒருவர் ஒருபோதும் தேசியத் தலைவராக வரமுடியாது. கொலையாளியை காங்கிரஸ் தொண்டர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாஜகவில் மட்டுமே இது சாத்தியம்’ என்று கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ராகுல் காந்தியின் இந்த கருத்து, அப்போதைய பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷாவை நேரடியாகக் குறிப்பிடுவதாகவும், அவதூறானதாகவும் இருப்பதாகக் கூறி, சாய்பாசாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் பிரதாப் கட்டியார் என்பவர் 2018 ஜூலை 9 அன்று ஜார்கண்ட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், ஆகஸ்ட் 6 (இன்று) விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதனையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ராஞ்சியில் இருந்து சாய்பாசாவுக்குப் பயணம் செய்து, எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

Tags : Amit Shah ,Rahul ,Ranchi ,Lok Sabha ,Rahul Gandhi ,Jharkhand ,BJP ,president ,Congress ,party ,Congress party ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...