×

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்..!!

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஓராண்டுக்கு மேலாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்தது. மேகதாது அணை தொடர்பான வழக்கை விசாரிக்க அமர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்தது. ஏற்கனவே 3 அமர்வுகள் விசாரணை நடத்துவதால் அங்கு சென்று முறையிட தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Tags : Supreme Court ,Karnataka Government ,Dam ,Delhi ,Megadhat Dam ,Chief Justice ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...