×

இன்று புது வலிமையை பெற்றேன் முதல்வர் டிவிட்

சென்னை: கொளத்தூர் பகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையை பெற்றேன் இன்று. இன்றைய கொளத்தூர் நிகழ்ச்சியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், கொளத்தூரில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டிடம், ரெட்டேரியில் ஏசி பேருந்து நிறுத்தம் என ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். நலம் விசாரித்து அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Kolathur ,Kalaignar ,Centenary Bus Terminus ,Klampakam ,Deputy Commissioner of ,Peravallur ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...