×

சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ..!!

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வளைகுடா நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை சவூதி அரசு நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், மீண்டும் 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை அமல்படுத்தியது.

2022ம் ஆண்டு 19 பேரும், 2023ம் ஆண்டு 2 பேரும், 2024ம் ஆண்டு 117 பேரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டது. கஞ்சா,போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக நஜ்ரானில் 4 சோமாலியர்கள், 3 எத்தியோப்பியர்கள், தாயை கொலை செய்த குற்றத்திற்காக சவுதி குடிமகன் ஒருவர் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

Tags : Saudi Arabia ,Gulf ,Saudi government ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...