- அமைச்சர்
- சாமிநாதன்
- அண்ணா மற்றும் கலைஞர்
- சென்னை
- எம்.பி சமினாதன்
- அண்ணா மற்றும்
- கலைஞர்
- நினைவிடங்கள்
- மெரினா கடற்கரை
- தமிழ்
- அண்ணா
- அன்னா மெமோரியல்
சென்னை: சென்னையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் ேநற்று நேரில் ஆய்வு செய்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தார். இதை தொடர்ந்து, அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் நடந்து வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அண்ணா நினைவிடத்தில், ஸ்தூபி, சிலை புதுப்பிக்கும் பணி, புல்வெளிகளை பராமரித்தல், உடைந்துள்ள பளிங்கு கற்களை சீரமைத்தல், தரைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சீர் செய்யும் பணி, அண்ணா வளைவு முகப்பினை தூய்மை செய்யும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதுபோல கலைஞரின் நினைவிடத்தில் கலைஞர் உலக அருங்காட்சியகத்தில் கலைஞர் நிழலோவியங்கள், உரிமை போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம், கலைஞர் புத்தக விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். கலைஞர் நினைவிடத்தை ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிகழ்வின் போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) இரா.பாஸ்கரன், செயற்பொறியாளர் எஸ்.விஜய்ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
