×

சீர்காழியில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

சீர்காழி, ஆக. 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியம். சீர்காழி நகர திமுக பாக முகவர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னிலையில், திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ‌கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார். கூட்டத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட், நகர செயலாளர் சுப்பராயன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ், ஒன்றிய பொருளாளர் இத்ரீஸ் ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, கவுன்சிலர்கள் பாஸ்கரன், ராமு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து உறுப்பினர்களையும் ஓரிரு நாட்களில் சேர்த்திட வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும் என மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் அறிவுரை வழங்கினார்.

Tags : DMK ,Sirkazhi ,Sirkazhi East Union ,Mayiladuthurai district ,DMK Union ,Prabhakaran ,MLA ,Panneerselvam ,DMK District ,Poompuhar ,Nivetha Murugan ,Chief General Committee ,Vincent ,City ,Subbarayan ,
× RELATED ஓய்வூதியர் தின விழா