×

பரமன்குறிச்சியில் அரைகுறையில் நிற்கும் பேவர் பிளாக் சாலை வாகன ஓட்டிகள் அவதி

உடன்குடி, டிச.4: பரமன்
குறிச்சியில் அரைகுறையில் நிற்கும் பேவர் பிளாக் சாலைகளால் வாகனஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். பரமன்குறிச்சியில் இருந்து காயாமொழி செல்லும் சாலை பல்லாண்டுகளாக சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்தது. இதுகுறித்த புகார்களை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. இதில் அரங்கன்விளை பகுதியில் இருந்து சுமார் 100மீட்டர் தொலைவிற்கு தார்ச்சாலை அமைப்பதற்குப் பதிலாக சரள் கொண்டே சாலை அமைத்திருந்தனர். இந்நிலையில் சாலைகள் அமைக்காமல் விடப்பட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்களை கொண்டு சாலைகளை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான பணியில் ஆரம்பத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள், சிறிது தொலைவிற்கு அமைத்துவிட்டு முழுமையாக அமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு சென்றனர். இவ்வாறு அரைகுறையில் நிற்கும் பேவர் பிளாக் சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இனியாவது இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுத்து கிடப்பில் கிடக்கும் பேவர் பிளாக் சாலைப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Motorists ,Paver Block ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...