×

கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருச்சி ஆக 5: திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி கே.கே. நகர் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல திருச்சி முதலியார் சத்திரம் டீ கடை அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த பிராங்கிலின் நிக்சன் ராஜ் (25) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருச்சி குட்செட் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேல தேவதானம் பகுதியை சேர்ந்த மதன்குமார் (24), மதுரை ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (27)ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Trichy ,Palakkarai police ,Alam Street ,Palakkarai, Trichy ,Sakthivel ,LIC Colony ,K.K. Nagar ,Frankil ,Sankaran Pillai Road ,Mudaliar ,Chatram Tea ,Shop ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...