×

SSC தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட்டு எளிதாக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கடிதம்

 

மதுரை: SSC தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட்டு எளிதாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். பொறுப்பற்ற நடவடிக்கை. நெல்லை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை.மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கீடு. பெருநகரமான சென்னையில் ஒரே ஒரு தேர்வு மையம். ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி ஜூலை 25ஆம் தேதியே பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தொலைதூரத்தில் தேர்வு மையங்கள் அமைத்தது, குறைந்த எண்ணிக்கையிலான மையங்கள், தேர்வின்போது கணிணிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் தேர்வு எழுதியவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

நாடு முழுவதும் இதனைக் கண்டித்து களத்திலும், சமூக வலைதளங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உடனடியாக இப்போராட்டத்திற்குச் செவிசாய்த்து SSC தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட்டு எளிதாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Tags : SSC ,Su. Venkatesan ,Modi ,Madurai ,Nellai ,Coimbatore ,Vellore ,Puducherry ,Andhra Pradesh ,Department of Archaeology ,Trichy ,Chennai ,Union Government Staff Selection Commission ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...