×

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் இன்று நடைபெற இருந்த ‘இண்டஸ்ட்ரியல் லா’பாடத்தின் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பல்கலை.யின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளில் ‘இண்டஸ்ட்ரியல் லா’ தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கட்டுள்ளது.

இண்டஸ்ட்ரியல் லா’ பாடத்தின் தேர்வுக்காக அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்பப் பெறும் பணி நடைபெற்று வருகிறது. இண்டஸ்ட்ரியல் லா’ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தேர்வு அலுவலரிடம் விசாரணைநடைபெற்று வருகிறது.

The post நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Nella ,Manonmaniam Sundaranar University ,Manonmaniyam Sundaranar University ,Nella Manonmaniam Sundaranar University ,Dinakaran ,
× RELATED எல்எல்ஆர் வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சம்...