×

நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதன் முடிவுக்காக இருக்கிறோம் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; தேர்வு முறைகேட்டுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தியாவின் தேர்வு முறைகளிலேயே பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அமைப்பு ரீதியாக சிக்கல்கள் உள்ள நீட் தேர்வு முறையை எப்படி சரி செய்யப்போகிறீர்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார். பணக்காரராக இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று லட்சக்கணக்கானோர் நம்புகின்றனர்.

இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர். தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை என்று கூறினார்.

 

The post நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,Dimuka ,Samajwadi ,Union Government ,Lok Alam ,Dinakaran ,
× RELATED கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு...