×

தேசிய சாதனை ஆய்வு தேர்வு கண்காணிப்பு பணிக்கு 219 கள ஆய்வாளர்கள்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, சென்னை, ஆதிதிராவிட, அரசு உதவி பெறும், தனியார், சிபிஎஸ்இ, கே.வி பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 150 வகுப்புகளுக்கு 3, 6 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அடைவு ஆய்வு மொழிப்பாடம், கணித பாடம் மற்றும் சூழ்நிலையியல் பாடத்தில் தேசிய சாதனை ஆய்வு (என்ஏஎஸ்) தேர்வு 4.12.2024 அன்று நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் 4,282 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இத்தேர்வு கண்காணிப்பு பணிக்காக டெட், டி.டி.ஐ, பி.எட், எம்.எட்., பயிற்சி மாணவர்கள் 219 பேர் கள ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தேசிய சாதனை ஆய்வு தேர்வு கண்காணிப்பு பணிக்கு 219 கள ஆய்வாளர்கள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Rashmi Siddharth Jagade ,Chennai district ,Adi Dravida ,CBSE ,KV ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு...