×
Saravana Stores

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்திற்கு ரூ.2.79 கோடி நிதி ஒதுக்கீடு

திருநெல்வேலி மாவட்டத்தில் 2023-2024ம் நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்திற்கு ரூ.2.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் உத்தேச நிதி இலக்காக ரூ.2.79 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் உயர்ரக காய்கறி குழித்தட்டு நாற்றுகளான கத்தரி, மிளகு, தக்காளி சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியம் வீதம் 55 ஹெக்டேருக்கு ரூ.11 லட்சம் நிதி இலக்கும், மா அடர்நடவிற்கு ஹெக்டேருக்கு ரூ.9,840 மானியம் வீதம் 30 ஹெக்டேருக்கு ரூ.2.952 லட்சம் நிதி இலக்கும், கொய்யா அடர்நடவிற்கு ஹெக்டேருக்கு ரு.17,600 மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.3.52 லட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

இதேபோல் பப்பாளி சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.23,100 மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.4.62 லட்சம், எலுமிச்சை சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.13,200 மானியம் வீதம் 30 ஹெக்டேருக்கு ரூ.3.96 லட்சம், நெல்லி சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.14,400 மானியம் வீதம் 60 ஹெக்டேருக்கு ரூ.8.64 லட்சம், உதிரி பூக்களின் சாகுபடிக்கு ெஹக்டேருக்கு ரூ.16,000 மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.3.20 லட்சம், சம்பங்கி பூ சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.60,000 மானியம் வீதம் 2 ஹெக்டேருக்கு ரூ.1.2 லட்சம், பல்லாண்டு வாசனை திரவிய பயிரான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய் நடவு செய்திட ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.4 லட்சம், கொக்கோ நடவு செய்திட ஹெக்டேருக்கு ரூ.12,000 மானியம் வீதம் 25 ஹெக்டேருக்கு ரூ.3 லட்சம் என்று நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தனியார் தோட்டங்களில் 20 மீட்டர் X 20 மீட்டர் X 3 மீட்டர் அளவுடைய பண்ணைக் குட்டை அமைப்பதற்கு ரூ.75,000 மானியம் வீதம் 11 எண்ணத்திற்கு ரூ.11.25 லட்சம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யும் இனத்தில் பசுமைக்குடில் அமைக்க 1 சதுரமீட்டருக்கு ரூ.467.5 வீதம் 2,000 சதுரமீட்டருக்கு ரூ.9 லட்சத்து 35 ஆயிரம், நிழல்வலை குடில் அமைக்க 1 சதுரமீட்டருக்கு ரூ.355 வீதம் 5,000 சதுரமீட்டருக்கு ரூ.17 லட்சத்து 75 ஆயிரம், நெகிழி நிலப்போர்வை ஹெக்டேருக்கு ரூ.16,000 மானியம் வீதம் 100 ஹெக்டேருக்கு 16 லட்சம் என்று நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை இனத்தின்கீழ் ஹெக்டேருக்கு ரூ.1,200 மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.24 ஆயிரம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது.

அங்கக வேளாண்மை செயல்படுத்துதல் இனத்தின்கீழ் விதைச் சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இரண்டாம் வருட மானியமாக ஹெக்டேருக்கு ரூ.3,000 வீதம் 100 ஹெக்டேருக்கு ரூ.3 லட்சம் மற்றும் மூன்றாம் வருட மானியமாக ஹெக்டேருக்கு ரூ.3,000 வீதம் 100 ஹெக்டேருக்கு ரூ.3 லட்சம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. நிரந்தர மண்புழு உரக்கூடாரம் அமைக்க அலகு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வீதம் 5 அலகிற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், மண்புழு உரப்படுகை அமைக்க அலகு ஒன்றுக்கு ரூ.8,000 மானியம் வீதம் 50 அலகிற்கு ரூ.4 லட்சம் என்று நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் அயல்மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து அதிக மகசூல் பெறும் பொருட்டு தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க தேனீப்பெட்டி ஒன்றுக்கு ரூ.800 மானியம் வீதம் 250 பெட்டிகளுக்கு ரூ.2 லட்சம், தேன் பிழியும் எந்திரம் ஒன்றுக்கு ரூ.8,000 மானியம் வீதம் 25 எந்திரங்களுக்கு ரூ.6 லட்சம் என்று நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த அறுவடை பின்செய் நேர்த்தி இனத்தின்கீழ் சிப்பம் கட்டும் அறை அலகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் மானியம் வீதம் 10 அலகிற்கு ரூ.20 லட்சம், குளிர்பதன கிடங்கு(வகை 1) (5,000 மெட்ரிக்டன்) ஒன்றுக்கு ரூ.2,800 வீதம் 200 மெட்ரிக் டன்னிற்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் என்று நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலை உற்பத்தி பொருட்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வாகனம் ஒன்றிற்கு ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் வீதம் 3 எண்களுக்கு 27 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது. குறைந்த ஆற்றல் உடைய குளிர்அறை (8 மெட்ரிக்டன்) அமைப்பதற்கு ரூ.2.5 லட்சம் மானியம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது.
நடமாடும் காய்கனி விற்பனை வண்டி ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் வீதம் 50 எண்ணிற்கு ரூ.7.5 லட்சம், சிறப்பு வகைகளை ஊக்குவித்தல் இனத்தின்கீழ் வாழைத்தார் உறை ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 வீதம் 50 ஹெக்டேருக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரம், பண்ணை குறைபாடு களைதல் இனத்தின்கீழ் ரூ.2 ஆயிரம் வீதம் 100 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் என்று நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் நெல்லை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தினை செயல்படுத்திட ரூ.2.79 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இலக்கில் 80 சதவீதம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் www.http://www.tnhorticulture.tn.gov.in/inhortnet, http://www.tnhorticulture.tn.gov.in/inhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன்
தெரிவித்துள்ளார்.

The post தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்திற்கு ரூ.2.79 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli District ,Paddy District ,Dinakaran ,
× RELATED பக்ரைன் சிறையில் வாடும் தமிழக...