×

நகமுராவை வீழ்த்தி எரிகேசி அபாரம்: சீன வீரரிடம் குகேஷ் தோல்வி

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் சாம்பியன்ஷிப் கிளாசிக் போட்டியில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் நகமுராவை, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி டைபிரேக்கரில் வென்றார். நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி, நார்வேயில் நேற்று முன்தினம் நடந்த செஸ் போட்டி ஒன்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா உடன் மோதினார்.

இப்போட்டியின் கடைசியில் யாருக்கும் வெற்றி கிடைக்காததால் டைபிரேக்கரில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் சிறப்பாக ஆடிய எரிகேசி வெற்றி வாகை சூடினார். மற்றொரு போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், சீனா கிராண்ட் மாஸ்டர் வெ யி உடன் மோதினார். இப்போட்டியில் இருவரும் ஈடுகொடுத்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதால் டிராவில் முடிந்தது. எனவே, வெற்றியை தீர்மானிக்க நடந்த டைபிரேக்கரில் அபாரமாக ஆடிய வெ யி வெற்றி பெற்றார்.

இன்னொரு போட்டி, நார்வேயை சேர்ந்த உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனா இடையே நடந்தது. இதிலும் டை பிரேக்கர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இப்போட்டியில் வென்ற கார்ல்சன், 9.5 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கரவுனா 8 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், நகமுரா 6.5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், எரிகேசி 6 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளனர். குகேஷ், வெ யி 5.5 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளனர்.

The post நகமுராவை வீழ்த்தி எரிகேசி அபாரம்: சீன வீரரிடம் குகேஷ் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Erikasey ,Nakamura ,Kukesh ,Stavanger ,Grandmaster ,Arjun Erikasey ,Norwegian Chess Championship Classic ,Norwegian Chess Championship ,Stavanger, Norway ,Norway… ,Dinakaran ,
× RELATED மும்பையில் இன்று பேஷன்ஷோவில்...